செல்வராகவன்-சந்தானம் இணையும் படத்தின் டைட்டில்


cy0cy3euuaezfvxஇயக்குனர் செல்வராகவன் – நடிகர் சந்தானம் முதன் முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை(4.12.16)  பூஜையுடன் தொடங்கியது.

காமெடி படங்களில் நடித்து வந்த சந்தானம் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காதல் கதையில் நடிக்கவுள்ளார். அதனால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் தனது படங்களுக்கு ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, நெஞ்சம் மறப்பதில்லை என்று பாடல்களின்  வரிகளை டைட்டிலாக்கி வரும் செல்வராகவன், சந்தானத்துடன் இணையும் படதிற்கு ’மன்னன் வந்தானடி’ என்ற பாடல் வரியை டைட்டிலாக்கி இருக்கிறார்.


 

Leave a Response