சந்தானத்துடன் இணையும் விவேக்


santhanam-and-vivek‘சர்வர் சுந்தரம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படம் ’சக்கப் போடு போடு ராஜா’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்கிவருகிறார். விடிவி கணேஷ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் கதாநாயகியாக ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்த வைபவி ஷாந்தாலியா நடிக்கவுள்ளார். காமெடி நடிகராக விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்துவந்த விவேக் இப்படத்தில் காமெடி நடிகராக ஒப்பந்தம் ஆகியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


 

Leave a Response