சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பூஜை


suryaவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்தப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். படப்பிடிப்பு வருகிற நவம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது.

மேலும் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் சிங்கம் படத்தின் 3-ம் பாகமான எஸ் 3-யின் டீசர் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 

Leave a Response