குதூகலம் தருகிறதா அரண்மனை 3 !

இயக்கம் – சுந்தர் சி

நடிகர்கள் – ஆர்யா, ராஷிக்கண்ணா, ஆண்ட்ரியா, சுந்தர் சி, விவேக்

கதை – வழக்கமான அரண்மனை படத்தின் கதை தான் இதிலும். துரோகத்தால் கொல்லப்பட்ட பெண் பேயாக வந்து பழிவாங்க துடிக்கிறது. அரண்மனையில் இருப்பவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை

பேய் படங்களுக்கான வரவேற்பு எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் குறையாத வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் “அரண்மனை” திரைப்பட தொடரின் மூன்றாவது பாகமாக வெளியான “அரண்மனை 3“ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருந்தது.

அரண்மனை திரைப்படங்களை பொறுத்தவரை, அந்த திரைப்படங்களின் கதையோட்டம் ரசிகர்களுக்கு முன் கூட்டியே தெரியும். ஒரு அரண்மனை அதில் ஒரு குடும்பம், அதை பயமுறுத்தும் ஒரு பேய், அந்த பேய்க்கான பிளாஸ்பேக், இறுதியில் தெய்வ சக்தி எப்படி
பேய்யை கட்டுபடுத்துகிறது என பார்வையாளர்கள் முன்கூட்டியே நியாபகத்தில் வைத்திருக்கும் கதையை ரசிக்கும் வண்ணம் அளிப்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும், இயக்குனர் சுந்தர் சி, அவருக்கே உண்டான பாணியில் அதை சிறப்பாக கையாண்டுள்ளார்.

மற்ற அரண்மனை திரைப்படங்களை விட இந்த மூன்றாவது பாகம், ரசிகர்களை ஈர்க்கும் வகையில் பல சுவாரஷ்யங்களை கொண்டுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் கோயிலில் பல தடங்கலை தாண்டி , பல வருடங்கள் கழித்து திறக்கபடும் கருவறை ரகசிய அறை, அங்கு என்ன நடந்திருக்கும், எதனால் பூட்டியிருப்பார்கள் என்ற ஆர்வத்தை ரசிகர்களுக்கு உருவாக்குகிறது. இறந்து போன தன் அம்மா மேல் பாசத்தை வைத்திருக்கும் ராஷி கண்ணாவை, அவளது அம்மாவே கொல்ல பார்க்கிறார் என விரியும் திரைக்கதை அரண்மனை திரைப்படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு, விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் திரைக்கதை நகர உதவுகிறது.

யோகி பாபு மற்றும் விவேக் இருவரும் அவர்களுக்கே உண்டான பாணியில் தனித்தனியாக பயணம் செய்யும் காமெடியன்கள் என்றாலும், இந்த திரைப்படத்தில் அவர்கள் இணைந்து பயணிப்பது, ரசிக்கும்படி உள்ளது. பேயிடம் அடி வாங்கும் காட்சியில் இருவரும் சிரிக்க வைக்கிறார்கள்.

அரண்மனை திரைப்படதொடரின் முக்கிய புள்ளிகளில் ஒரு புள்ளி ஆண்ட்ரியா எனலாம். அரண்மனை பார்ட் 1-ல் தன் அழகுடன், நடிப்பையும் அளித்த ஆண்ட்ரியா, அதே போல் பார்ட்3-லும் தனது முழு பங்களிப்பை கொடுத்துள்ளார். இந்த கதையின் மைய ஓட்டமாக திகழும் ஆண்ட்ரியா, நடிப்பில் அந்த கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் மனதில் பதியும்படி செய்துள்ளார்.

ஆர்யா ஹீரோ என்கிறார்கள் ஆனால் கெஸ்ட் ரோல் போல் வந்து செல்கிறார். படத்தின் கதையும் காட்சிகளும் ஏற்கனவே பார்த்தவை தான். எந்த புதுமையும் இல்லை நிறைய கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் யாருக்கும் கதையில் முக்கியத்துவம் இல்லை. ஒளிப்பதிவு அபாரமாக இருக்கிறது. படத்தின் பாடல்கள் சுந்தர் சி படத்திற்கே உண்டான எளிமையும், ஈர்ப்பையும் கொண்டுள்ளது. மொத்தத்தில் அரண்மனை 3, அதன் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

Leave a Response