அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தம்


kajal-agarwal-vijay-next-filmபரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ’பைரவா’ படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை நெல்லையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை அட்லி இயக்குவதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த படத்தில் நடிக்க, நடிகர்- நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விஜய்க்கு ஜோடியாக நயந்தாரா நடிக்க இருக்கிறார்.இதில் இன்னொரு கதாநாயகியாக அனுஷ்காவை நடிக்க வைக்க முடிவு செய்யப்படிருந்தது. முக்கியத்துவம் இல்லாத வேடத்தில் அனுஷ்கா நடிக்க மாட்டார் என்று இப்போது காஜல்அகர்வாலை நாயகி பட்டியலில் சேர்த்துள்ளனர்.

விஜய்யுடன் ஏற்கனவே துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்திருக்கும் காஜல், இந்த படத்திற்க்கும் ஓகே சொல்லிவிட்டாராம்.


 

Leave a Response