பிகில் பட பாடல் லீக்! போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்?

நடிகர் விஜய், நயன்தாரா மற்றும் இந்துஜா இனைந்து நடித்துவரும் படம் ‘பிகில்’. இப்படத்தினை அட்லீ இயக்க, ஏ.ஜி.எஸ் சினிமாஸ் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை படத்தின் ஒரு பாடல் இணையத்தில் திருட்டுத்தனமா வெளியானது என்று சர்ச்சை ஏற்பட்டது. அந்த லீக்கான பாடலை ஏ.ஆர்.ரகுமான் மற்றும் கோரஸ் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் இசையிலான ஒரு பாடல் திருட்டுத்தனமாக இணையத்தில் லீக்கானது சினிமா வட்டாரத்தில் அதுவும் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த பாடல் லீக் பற்றி சிலர் ஏ.ஆர்.ரகுமானை தொடர்புகொண்டும் விசாரித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோ லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடன், அதிக செக்யூரிட்டி அம்சங்களுடன் பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பு நிறைந்த ஒரு இசை ஸ்டுடியோவில் இசையமைக்கப்பட்ட பாடல் ஒன்று இணையத்தில் திருட்டுத்தனமாக லீக்காகியுள்ளது ஏ.ஆர்.ரகுமான் பெயருக்கு களங்கம் விதிக்கும் விதமாக நிகழ்ந்துள்ளது.

பிகில் படத்தின் இந்த ஒரு பாடல் லீக் என்பது விளம்பரத்திற்கான ஒரு பொய் பிரச்சாரம் என்று சொல்லப்படுகிறது. இன்று பவுர்ணமி என்பதினால் இந்த ஒரு பாடலை இன்று வெளியிடலாம் என்று யோசித்த படக்குழுவினர் இப்படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானை கேட்டுள்ளனர், அதற்க்கு அவர் இன்னும் இந்த பாடலின் இசை முழுமை பெறவில்லை என்று தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. இன்று பவுர்ணமி என்பதினால் இந்த பாடலை வெளியிட்டால் நல்லது என்றும், அப்படியே இந்த பாடலை படக்குழுவினரே, இணையத்தில் திருட்டுத்தனமாக லீக் ஆக்கிவிட்டால் படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்றும் சொல்லியுள்ளனர் அட்லீ & குழுவினர். அதுமட்டுமின்றி இந்த ஒரு பாடல் லீக் ஆகினால், விஜய் ரசிகர்கள் இந்த பாடலை சமூகவலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகிவிடுவார்கள் அதுவும் ஒரு நல்ல பப்லிசிட்டி தானே என அட்லீ சொன்னாராம்!

இந்தியாவிலிருந்து இந்த பாடலை இணையத்தில் வெளியிட்டால் சிக்கலாகிவிடும் என்பதினால் இந்த பாடல் வெளிநாட்டிலிருந்து இணையத்தில் திருட்டுத்தனமாக லீக் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவருடைய இசை ஸ்டுடியோவில் இசையமைக்கப்பட்டு முழுமைபெறாத ஒரு பாடல், இணையத்தில் லீக்கானது தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக ரகுமான் இயக்குனர் அட்லீ மற்றும் தன்னுடைய நெருங்கிய வட்டாரத்தில் வருத்தப்பட்டுள்ளாராம். “உங்கள் பப்லிசிட்டிக்காக என்னுடைய பெயரையும், என்னுடைய ஸ்டுடியோவின் செக்குரிட்டி மீதான நம்பிக்கையையும் கேள்விக்குறி ஆக்கிவிட்டீர்களே?” என்று ரகுமான் அட்லீயிடமும் தயாரிப்பு நிர்வாகத்திடமும் வருத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பாடல் லீக் பற்றிய உண்மை படக்குழுவினருக்கு தான் வெளிச்சம்…எப்படியோ இந்த ஒரு பாடல் திருட்டுத்தனமாகவே லீக் ஆகிடுச்சுனே வெச்சிக்குவோம், ஆனால் இந்த பாடல் விஜய் ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது என்பது உண்மை.

Leave a Response