நலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்!

விஜய் சேதுபதி, பாபி சிம்மா, சஞ்சனா ஷெட்டி மற்றும் பலர் நடிப்பிலும், நலன் குமாரசாமி இயக்கத்தில், சி.வி.குமார் தயாரிப்பில் 2013ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘சூது கவ்வும்’. இப்படம் டார்க் காமெடி ஜானரில் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வனிகரீதியாக வெற்றி பெற்றது.

இப்படம் வெளியாகிய பின்னரே நிறைய தமிழ் படங்கள் இந்த டார்க் காமெடி ஜானரை பின்பற்றியது என்றுகூட சொல்லலாம்.

சூது கவ்வும் வெற்றியை தொடர்ந்து பல படங்களை தயாரித்தும், விநியோகம் செய்து வந்தார் தயாரிப்பாளர் சி.வி.குமார். தற்போது சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை சி.வி.குமார் தயாரிக்க முடிவிடுத்து அப்படத்திற்கான பணியை ஆரம்பித்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தை எழுதி இயக்கிய நலன் குமாரசாமி தான் சூது கவ்வும் 2 திரைப்படத்திற்கான கதையை எழுத்துகிறாராம். சூது கவ்வும் 2 படத்தின் கதை எழுத்தும் பணியை நலன் குமாரசாமி தொடங்கிட்டாராம், இன்னும் மூன்று மாத காலத்தில் இந்த கதை எழுதி முடிக்கப்பட்டுவிடுமாம். இப்படத்திற்கான இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது. 2019 செப்டம்பர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நலன் குமாரசாமி சூது கவ்வும் 2 திரைப்படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு சிம்புவை வைத்து ஒரு புது படத்தை இயக்க உள்ளாராம். நலன் குமாரசாமி இயக்கவிற்கும் சிம்புவின் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

Leave a Response