விஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்?

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக T.D.ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது.

பிரசாந்த் நடித்த ஜாம்பவான், அர்ஜுன் நடித்த வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து, சில வருடங்கள் கழித்து சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் T.D.ராஜா தயாரிப்பில் வெளியாக இருக்கும் ஒரு புதிய திரைபடம் “ராஜ வம்சம்”. இந்த திரைப்படம் T.D.ராஜாவின் தயாரிப்பில் மூன்றாவது திரைபடமாகும். மெட்ரோ திரைப்படத்திற்கு பிறகு ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் இப்படம் T.D.ராஜாவின் நான்காவது தயாரிப்பாகும்.

அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் .

உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்க, N.S.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர்.

இதர நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக களைஞர்களா விவரங்கள் பற்றிய தகவல்களை விரைவில் தெரிவிப்பதாக தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

படக்குழுவினர் கலந்துகொண்டு இப்படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது.

Leave a Response