“மெட்ரோ” திரைப்பட விமர்சனம்:

Metro Review
நடிகர்கள்: சிரிஷ், பாபி சிம்மா, மாயா, துளசி, சென்றாயன், சத்யா, நிஷாந்த் மற்றும் யோகி பாபு.

தொழில்நுட்ப கலைஞர்கள்: எழுத்து & இயக்கம் – ஆனந்த கிருஷ்ணன், இசை – ஜோகன், ஒளிப்பதிவு – N.S.உதயகுமார், படத்தொகுப்பு – ரமேஷ் பாரதி, பாடல்கள் – கானா பாலா மற்றும் தனிக்கொடி, தயாரிப்பு – ஆனந்த கிருஷ்ணன் & ஜெயகிருஷ்ணன்.

“மெட்ரோ”–+-+. கல்லூரியில் படிக்கும் இளைஞனின் சின்ன சின்ன ஆசைகள், காலம் அவனுக்கு காட்டும் பகட்டு வாழ்க்கை, அவன் குடும்ப சூழலை மறந்து தவறுகளை செய்ய ஆரம்பிக்க அவன் முடிவு என்ன என்பதை படம் என்ற பாடமாக இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் வழங்கியுள்ளார். புதுமுக ஹீரோ, பத்திரிகையாளராக வாழ, நேர்மையான ரிட்டையர்டு போலீஸ் அதிகாரி, செல்ல அம்மா என்ற குடும்பத்தில் தம்பி குணம் ஆடம்பர ஆசையை நோக்கி அவன் தடம் மாறுவதால் விளைவுகள் என்ன? பிரமாதமான படிப்பினை. கழுத்துல செயின் போட்டு வெளியில் வரும் பெண்கள் இவர்களுக்கு பணம் தரும் வங்கி. “குணா” கேரக்டரில் பாபிசிம்ஹா பேசற பிலாசப்பி அருமை. நண்பனின் அன்னையை கொன்றவனை பழிவாங்க சென்ராயன் கேரக்டர் அருமை. சண்டை காட்சிகளில் வெளுத்து வாங்கியுள்ளார். இளைஞர்கள் பண ஆசை மோகத்தில் சீரழிவதை தத்ரூபமாக விழிப்புணர்வு காட்சகளாக டைரக்டர் தந்துள்ளார். பைக், ஹெல்மெட், உடைகள் செம செம. அழகு ஒளிப்பதிவு பிரமாதம்.

ஆக்சன் காட்சிகள் பவர்புல் பலம். அம்மாவை கொன்றவனை தேடும் ஹீரோவின் கோபம் வேகம் ஆஹா, காவல் அதிகாரியிடம் தன் விசாரணையை முடித்துவிட்டு திருடன்களை ஒப்படைப்பது சூப்பர்.

“மெட்ரோ”– SPL பாராட்டு: கொள்ளையடிக்கப்பட்ட செயின்கள் அப்படியே விற்பனைக்கு வரவே முடியாது. அவற்றை வாங்க ஒரு கும்பல், அவற்றை தங்க பிஸ்கட்டுகளாக மாற்ற ஒரு கம்பெனி, ஊழியர்கள், அந்த நெட்ஒர்க், இப்படி டைரக்டர் விரிவாக ஆராய்ந்து காட்சிகளை தந்துள்ள களப்பணி அருமை. பின்னணி இசை படத்துக்கு பலம். முதலில் பைக் மோகத்தால் பாதை மாறும் கல்லூரி மாணவன் அடுதடுத்து தவறுகளை தனியாக செய்வது, தங்களுக்கு தலைவனாக ஒருவன் வேண்டுமா என்று நினைத்து குணா’வை சமயம் பார்த்து தண்டிப்பது இப்படி அலைபாயும் மனசு வயசு கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையை தந்த தெளிவான திரைக்கதை அமைப்பு. அன்னையை கொன்றவன் யாரென்று ஹீரோ அறிந்த நொடி ஷாக். அடுத்து ஹீரோ எடுக்கும் அந்த முடிவு, டைரக்டர் கதைக்கு தந்த வெகுமானமே என்று பாராட்டாமல் இருக்க முடியாது.

“மெட்ரோ”, நகை அணிந்து வெளயில் வரும் பெண்களுக்கு விழிப்புணர்வு படம் பாதை மாறும் இளைஞர்களுக்கு நீதியை உணர்த்தும் படம்.

விமர்சனம்: பூரி ஜெகன்.

Leave a Response