நில மோசடி வழக்கில் கைதாகிறார் பிரபல நடிகை…?

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ளது LIC நகர். இங்கு உள்ள ஒரு நிலத்தினை நடிகை ஒருவர் வேறொருவருக்கு 2012ம் ஆண்டில் கிரயம் செய்துள்ளார்.

இந்த விஷயம் அறிந்த இடத்தின் ஒரிஜினல் உரிமையாளர், அந்த நடிகை மீது அப்போது காவல் துறையில் நில மோசடி புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரில் முகாந்திரம் இருந்ததால், காவல்துறையினர் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் OS: 36/2012 என்ற எண்ணில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் அந்த நடிகை போலி ஆவணங்களை வைத்து இந்த நில மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

பிரபல நடிகை என்று குறிப்பிட்டுள்ளோமே, யார் அந்த பிரபல நடிகை என்று தானே யோசிக்கிறீர்களா. நடிகையும், நம்ம சின்னத்திரை தயாரிப்பாளருமான குட்டி பதமினி தான், நில மோசடி புகாரில் சிக்கியுள்ள பிரபல நடிகை.

இதன் காரணமாக நடிகை குட்டி பத்மினி விரைவில் கைது செய்யப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

சீரியல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறை படி, சீரியல் தயாரிப்பாளர்கள் மீது எந்த ஒரு கிரிமினல் வழக்கும் இருக்க கூடாது என்பது நியதி என்று சொல்லப்படுகிறது. அப்படி கிரிமினல் வழக்கு ஏதாவது இருந்தால், அந்த சங்கம் அவர்கள் டிவி சீரியல்கள் தயாரிக்க ஒத்துழைப்பு தராது. குட்டி பத்மினி தொடர்ந்து பல மொழிகளில் டிவி சீரியல் தயாரித்து வருகிறார். குட்டி பத்மினி மீது உள்ள இந்த கிரிமினல் வழக்கு பற்றி டிவி சீரியல் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தெரியுமா? இதன் காரணமாக குட்டி பத்மினி டிவி சீரியல் தயாரிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response