பாஜக அரசின் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து ஜவாஹிருல்லா பேட்டி


img-20161020-wa0003மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

இந்த சட்டத்தை எதிர்க்கும் வகையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்ற கட்சி தலைவர்கள் அனைவரையும் சந்தித்து ஆதரவு திரட்ட துவங்கியுள்ளார்.

அதன் அடிப்படையில், இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசரை சந்தித்து பொது சிவில் சட்டத்திற்கு எதிராக ஆதரவு கேட்டு இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

இதில் சட்ட ஆணையத்தின் மூலமாக கொண்டு வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறதாகவும், இந்த பொது சிவில் சட்டத்தை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள் புறக்கணிக்கிறது. இது ஷரியத் சட்டத்திற்கு பங்கம் விளைவிப்பதாக உள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவு விலையை அளிக்க முடியவில்லை, கருப்புப்பணத்தை கொண்டுவரவில்லை எனவும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


 

Leave a Response