புதுமுக கதாநாயகனை நம்பியதால், முடிவடையும் தருவாயில் நின்றுபோன திரைப்படம்….

ராஜேஷ் என்பவர் ஒரு புதுமுக நடிகர். இவர் சமீபத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க பிரபல தயாரிப்பு நிறுவனத்தினால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும்போது, தான் அந்த படத்திற்கு ஒரு முதலீட்டாளராகவும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 80% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் கதாநாயகனாக ராஜேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்துக்கு பணம் முதலீடு செய்வதாக சொன்ன கதாநாயகன் ராஜேஷ் தன்னால் தற்போது இப்படத்தில் எந்த ஒரு பண முதலீடும் செய்ய இயலாது என கைவிரித்துள்ளார்.

ராஜேஷை நம்பி இப்படத்தில் முதலீடு செய்து படத்தின் 80% படப்பிடிப்பை முடித்துள்ள தயாரிப்பு நிறுவனம், மீதி படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடியாமல் தத்தளித்து வருகிறது.

பிரபல தயாரிப்பு நிறுவனத்திருக்கே ஹல்வா கொடுக்கும் இப்படிப்பட்ட புதுமுக கதாநாயகன்கள், நடித்து பிரபலமானால் வளர்த்துவிட்டவர்களை எட்டி உதைக்கவும் தயங்கமாட்டார்கள்.

Leave a Response