சசிகலா குடும்பத்திற்கு அதிமுகவில் இடமில்லை-அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா குடும்படுத்திற்கு அதிமுகவில் இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சசிகலா குடும்பத்தில் பெரும் மோதல் வெடித்துள்ளது. தினகரனும் திவாகரனும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். தினகரனும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் எலியும் பூனையுமாக உள்ளனர். இந்நிலையில் திவாகரன் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்துள்ளார். இதனிடையே அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஜெயலலிதாவால் நிராகரிக்கப்பட்டவர் என்று தினகரனே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஏற்க தயாராக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்றியதால் தமிழக அரசுக்கு பின்னடைவு இல்லை என்றும் ஜெயக்குமார் கூறினார். குற்றவாளி என நிரூபணமானால் மட்டுமே அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகல் பற்றி கேட்கலாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்திற்கு அதிமுகவில் இடமில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டிரப்பதற்கு தீர்ப்பின் நகலை பார்த்த பிறகே கருத்து கூற முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Leave a Response