ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன்

ஊதிய முரண்டுபாடுகளை களையக்கோரி தமிழகளவில் ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறருடைய தூண்டுதலின் பேரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் முன்னறிவிப்பு மற்றும் அனுமதி பெறாமல் கடந்த 23ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை குறித்த பிரச்னைக்கு ஒரு நபர் குழுவின் பரிந்துரை மூலமாக தீர்வு எட்டப்படும். அதனால் இந்த வாக்குறிதியை ஏற்று ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடவேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Response