டீ குடிக்க போன கேப்பில் மனைவியைக் கொன்ற கொடூரம்: தென்காசியில் பரபரப்பு!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

இதில் பரமசிவன் ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பரமசிவன் டீ குடிப்பதற்காக வெளியே கடைக்கு சென்று விட்டார். இவர்களது இரு மகன்களும் இரவு கபடி போட்டியை பார்த்துவிட்டு வீட்டின் மேல் மாடியில் தூங்கிய நிலையில் உமா மட்டும் கீழே தூங்கியுள்ளார்.

இதில் உமா தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட மர்ம நபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து கத்தியால் உமாவை குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். வெளியே சென்ற பரமசிவன் வீட்டிற்கு வந்தபோது தன் மனைவி சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளி யார் என்பதையும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் மணிகுமார் (44) என்ற தோல் வியாபாரி பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்தது தெரிய வந்தது. அவரை இன்று காலை தான் போலீசார் கைது செய்தனர்.

அதாவது இது தொடர்பாக உமாவின் கணவர் கொடுத்த புகாரில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் மணிகுமார் மற்றும் உமா இருவரும் பழகி வந்துள்ளனர். என்னுடைய மனைவி அவருடன் நட்பாக பழகி வந்த நிலையில் பின்னர் மணிகுமாரிடம் பழகுவதை நிறுத்திவிட்டார். இதனால் மீண்டும் பழகும்படி மணிகுமார் உமாவை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார்.

எனவே அவர்தான் என்னுடைய மனைவியை கழுத்தறுத்து கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறிய நிலையில் தலைமறைவான மணிகுமாரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response