உத்திரபிரதேச மாவட்டத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் பூஜா சவுகான் (20). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென பூஜா ஒரு மரத்தில் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் கிட்டத்தட்ட தரையில் இருந்து சுமார் 6 அடி உயரத்தில் உள்ள மரக்கிளையில் கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கியபடி பூஜா கிடந்துள்ளார். இதன் காரணமாக இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
https://x.com/Delhiite_/status/1903743509536100828?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1903743509536100828%7Ctwgr%5Ed22598ffccd8184149a050fa6ef41944f6e77b13%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
இந்த சம்பவம் நடந்த நாளில் பூஜாவின் பெற்றோர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் சென்றுள்ளனர். மேலும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் திடீரென பூஜா மரத்தில் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது