கல்லூரி மாணவியை கற்பழித்த காமக்கொடூரர்கள்!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 20 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார்.

இந்த மாணவி நேற்று முன்தினம் கல்லூரி முடிந்த பிறகு வழக்கம் போல் வீட்டிற்கு கிளம்பினார். கிட்டத்தட்ட மாலை 6 மணி அளவில் ஆட்டோவில் இருந்து இறங்கிய மாணவி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஹேம்ராஜ் சிங் என்ற 23 வயது வாலிபர் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் வந்துள்ளார்.

அவர் திடீரென மாணவியை அங்கிருந்த ஒரு மரத்திற்கு பின்னால் இழுத்துச் சென்று தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஹேம்ராஜ் சிங், ஜிதேந்திர சிங் (25), நேபாள் சிங் (20)ஆகியோரை கைது செய்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு சிறுவனையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response