மனைவியை எரித்த கணவன்: தென்காசியில் பயங்கரம்!

தென்காசி அருகே இலத்தூர் பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பெண் சடலம் கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசாருக்கு உள்ளூர் மக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார், எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணையை நடத்தினார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. கொல்லப்பட்ட பெண் சிவகாசியைச் சேர்ந்த கமலி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவருக்கு வயது 30. இவரது கணவர் ஜான் கில்பர்ட். இவர்களுக்கு நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவர் ஜான் கில்பர்ட் மனைவி கமலியை கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை கம்பியால் அடித்து கொலை செய்ததாக தெரிகிறது. கம்பியால் தாக்கியதால் கமலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து, மனைவியின் உடலை இரண்டு நாட்களாக தனது நண்பரின் காரில் வைத்து பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்திருந்தாக கூறப்படுகிறது.

பிறகு, இலத்தூர் காட்டுப் பகுதியில் மனைவியின் உடலை தீ வைத்து எரிந்துள்ளார். இதற்கு உதவியாக ஜான் கில்பர்ட் சகோதரர் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் பெண்ணின் உடலுக்கு தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர். இவர்கள் காரில் சுற்றித்திரிந்தது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் ஜான் கில்பர்ட் மற்றும் அவரது சகோதரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பெண்ணை உடலை மீட்டபோது அவரது உடல் முழுவதுமாக கருகிய நிலையில் இருந்துள்ளது. மேலும், அவரது ஒரு கை மட்டும் பாதி ஏரிந்த நிலையில் இருந்திருக்கிறது. மேலும், அவரது காலில் மெட்டி இருந்துள்ளது. இந்த சடலத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கைதான இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response