பெண் முன்னால் ஆடைகளை கழற்றி அத்துமீறிய நபர்கள்: போலீஸ் அதிரடி.

சென்னை பாரிமுனையில் 36 வயது பெண்மணி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே உள்ள தெருவில் அந்த பெண் தனது தங்கையுடன் நடந்து செல்லும் போது அப்பகுதியைச் சேர்ந்த ஷேக் செய்யது அலி(29) என்பவர் தகாத வார்த்தைகள் பேசி ஆபாச செயல்களில் ஈடுபட்டார்.

இது குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், ஆதம் தெருவை சேர்ந்த ஷேக் செய்யது அலி மற்றும் அவரது நண்பர் ஆறுபடை ஆகியோர் சகோதரிகளை வழிமறித்து ஆபாசமான வார்த்தைகளால் பேசி பின்பு அவர்களின் ஆடைகளை கழற்றி அத்துமீறியது தெரியவந்துள்ளது. சகோதரிகள் அங்கிருந்து நகர்ந்து சென்ற போதும் அவர்களை விடாமல் தொந்தரவு செய்துள்ளனர். உடனே அந்த பெண்கள் கத்தி கூச்சல்லிட்டதால் ஷேக் செய்யது அலியும், அவரது நண்பரும் தப்பி ஓடினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஷேக் செய்யது அலியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் ஆறுபடையை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Response