மின்கம்ப வேலைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கியதால் உயிரிழப்பு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் பகுதியில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் ஏரி காலனி பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரும் வேப்பங்குப்பம் ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் மின் விளக்கு கம்பத்தை நடுவதற்காக அதனை தூக்கி நிறுத்தியுள்ளனர்.

அப்போது மின்விளக்கு கம்பம் மின் கம்பியின் மீது மோதியது.

இதனால் மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆப்ரேட்டர் முத்துக்குமரன், அசோக் குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response