கவனிக்காமல் சாலையை கடந்த சிறுவன் : நடந்த கோர விபத்து!

கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு சிறுவன் சாலையின் இருபுறமும் பார்க்காமல் கவனம் இல்லாமல் கடந்து செல்கிறான்.


அப்போதான் வழியாக வந்த ஒரு பைக் நொடி பொழுதில் சிறுவன் மீது மோதியது. இந்த சம்பவம் மங்களூர் பகுதியில் உள்ள மஞ்சேஷ்வர் என்ற பகுதியில் நடந்துள்ளது.

அதாவது பள்ளி முடிந்து சிறுவர்கள் வெளியே வந்த நிலையில் ஒரு சிறுவன் சாலையை கவனிக்காமல் கடந்து செல்கிறான். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பைக் சிறுவன் மீது மோதியதில் தூக்கி வீசப்படுகிறான். இதில் அந்த சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Response