மு க ஸ்டாலின் , கருணாநிதியை விட ஆபத்தானவரா? – தொல்.திருமாவளவன் விளக்கம்

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவளவன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சந்தித்த நெருக்கடிகளை விட அதிக நெருக்கடிகளை சந்திக்கும் நிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இருந்த போதிலும், அனைத்து நெருக்கடிகளையும் அவர் தாக்குப்பிடித்து நிற்பதாக தெரிவித்த அவர், கருணாநிதியை விட ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் என எதிரிகள் சொல்கிறார்கள் என்றால், அவர்கள் எந்த அளவிற்கு அச்சம் அடைந்துள்ளார்கள் என்றும், எந்தளவிற்கு அவர்களை அச்சுறுத்தும் வலிமையினை தளபதி ஸ்டாலின் பெற்றிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கருணாநிதியைவிட கொள்கை பகைவர்களுக்கு ஆபத்தான பேராளுமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குவதாகவும், தி.மு.க.வுடன் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும் என்ற தேவை கம்யூனிஸ்டுகளுக்கோ, வி.சி.க.வுக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ இல்லை. ஆனாலும் நாங்கள் தி.மு.க.வுடன் இருப்பதற்கு காரணம் மு.க.ஸ்டாலினின் தலைமைதான் என்று தெரிவித்தார்

Leave a Response