சாலிகிராமம் காந்திநகர், பெரியார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அடிக்கடி இரவு நேரங்களில் வாலிபர்கள் பலர் வந்து செல்வதாக அந்த குடியிருப்பில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள், விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் பேரில் விபசார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் திடீரென அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது, அசாம் மாநிலத்தை சேர்ந்த பாலியல் புரோக்கர் ராகுல் (எ) சஞ்ஜிப் ராய் (22) என்பவர், ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் சஞ்ஜிப் ராயை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து வாடிக்கையாளர்களை பிடிக்க பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண் ஒருவரை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.