கர்நாடகாவில் யாதகிரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் பீமண்ணா (32), பஸம்மா (25) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர்.
இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாக குழந்தை இல்லை. இதனால் பஸம்மா கணவன் பிற ஆண்களுடன் உடலுறவு செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதனை பஸம்மா பலமுறை மறுத்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று இதேபோன்று பீமண்ணா தனது மனைவியை பிறருடன் உடலுறவு செய்து வைத்துக்கொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனை மறுத்த அவரது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் தனது மனைவியின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு பஸம்மா மூச்சுப் பேச்சின்றி கிடப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து பீமண்ணா அவரது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பரிசோதனையில் பஸம்மா கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கணவனுடைய செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அதில் அவர் கடன் வாங்கி உள்ளவர்களிடம் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்திய ஆடியோ கண்டறிந்தனர். இதனால் அவர்தான் கொலை செய்துள்ளார் என்பதை உறுதி செய்த காவல்துறையினர் பீமண்ணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.