பிளாஸ்டிக், இலை, பூக்கள், கயிறு போன்ற பொருட்களால் விநோதமான அரைகுறை ஆடைகளை அணிந்து சர்ச்சைக்கு பேர் போனவர் தான் பாலிவுட் நடிகை ஊர்ஃபி ஜாவேத்.
பார்ப்பதற்கு அழகாக, கியூட் லுக்கில் வலம் வந்த ஊர்ஃபி தற்போது உதடுகள் வீங்கி பார்க்கவே அகோரமாக மாறி இருக்கிறார். அப்படி ஊர்ஃபிக்கு என்ன தான் நடந்தது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
வட இந்தியா மட்டுமில்லாமல் தென்னிந்தியாவிலும் பிரபலமானவர் ஊர்ஃபி ஜாவேத். மாடலான இவர் திரைத்துறை மீதான காதலால் வீட்டை விட்டு மும்பைக்கு வந்துள்ளார். அங்கு மாடலிங்கில் இருந்த ஊர்ஃபி பிக்பாஸ் ஓடிடி மூலம் பெரிதாக பிரபலமானார். பின்னர் பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்த ஊர்ஃபி அனைவரும் அறிந்த நபராக மாறினார்.
ஊர்ஃபி நடிப்பு மட்டுமில்லாமல், தன்னை தனித்துவமாக காட்டி கொள்ள வித்யாசமான முறையை கையாள தொடங்கினார். தனது ஆடைகளை விதவிதமாக வடிவமைத்து அணிந்து பொதுவெளியில் வந்து போஸ் கொடுத்தார்.
பேப்பர், சிப்ஸ் பாக்கெட், பிளாஸ்டிக் பொருட்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், கயிறு, பூக்களின் இதழ்கள் மற்றும் பிளேடால் செய்யப்பட்ட ஆடைகள் என விநோதமான அரைகுறை ஆடைகளை அணிந்து வந்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். இதனால் ஊர்ஃபி சர்ச்சை நடிகையாக அறியப்பட்டார். அவர் மீது வழக்குகளும் பாய்ந்தன.
இந்த நிலையில் ஊர்ஃபி பகிர்ந்த ஒரு வீடியோ அவரது ரசிகர்களை கடுமையாக அதிருப்தியடைய செய்துள்ளது. மருத்துவமனையில் தனது உதட்டுக்கு ஊசி போடும் வீடியோவை ஊர்ஃபி பகிர்ந்துள்ளார். நடிக்கும் ஆசையுடன் மும்பைக்கு வந்த ஊர்ஃபி தன்னோட 18 வயசுல உதடு எடுப்பாகவும், பெரிதாகவும் இருக்க ஆசைப்பட்டு லிப் ஃபில்லர் என்ற சிகிச்சையை எடுத்துள்ளார்.
இது தான் தற்போது அவருடைய அகோரமான முகத்துக்கு காரணாமாக மாறியுள்ளது. 9 ஆண்டுகள் கடந்த நிலையில் லிப் ஃபில்லர் சரியாக இல்லை என்பதால் அதை நீக்க முடிவெடுத்த ஊர்ஃபி, மறுபடியும் சரியான மருத்துவரை அணுகி மீண்டும் சிகிச்சை எடுத்துள்ளார்.
லிப் ஃபில்லரை நீக்கும் முறைக்காக தனது உதட்டில் ஊசி போடுவதை வலி மிகுந்த உணர்வுடன் ஊர்ஃபி பகிர்ந்துள்ளார். லிப் பில்லர் சிகிச்சை முறை மிகவும் வலி மிகுந்த ஒரு பிராசஸ். இதை சரியாக செய்யவில்லை என்றால் இப்படி தான் வேதனை பட வேண்டும் என ஊர்ஃபி பகிர்ந்துள்ளார்.
லிப் ஃபில்லர் சிகிச்சைக்காக ஊசி போட்டதால் இரு உதடுகளும் வீங்கி, முகமும் வீங்கி ரத்தம் சிவந்து இருக்கும் ஊர்ஃபியை பார்த்த அவரது ரசிகர்கள் இயற்கையாகவே அழகாக இருக்கும் முகத்தை ஏன் இப்பட்டி மாற்றி உடலை வீணாக்கி கொள்கிறீர்கள் என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
லிப் ஃபில்லர் என்பது உதடுகளின் தோற்றத்தை மேம்படுத்தவும், சிறிதாக இருக்கும் உதடுகளை பெரிதாக காட்டவும் பயன்படும் ஒரு சிகிச்சை முறை. இதில் ஹைலூரோனிக் அமிலம் என்ற ஜெல்லி போன்ற ஃபில்லர் உதடுகளுக்குல் செலுத்தப்படுகிறது. அதன்மூலம் உதடுகள் பெரிதாக்கப்படுகின்றன.
இந்த வகை சிகிச்சை முறை உதடுகளின் அளவு, வடிவம், மற்றும் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மாற்றி அமைக்க உதவுகின்றன. லிப் ஃபில்லர் சிகிச்சையால் முகம் வீக்கம், சிராய்ப்பு, வலி, அசௌகரியம் போன்றவை ஏற்படலாம். லிப் ஃபில்லர் சிகிச்சையை செய்து கொண்டால் தொடர்ந்து உதடுகளை பராமரித்து வர வேண்டும். இல்லையென்றால் அதுவே ஆபத்தாகவும் மாறிவிடும். ஒருமுறை லிப் ஃபில்லர் சிகிச்சை செய்து விட்டால் அது அப்படியே நிரந்தரமாகி விடாது. சில மாதங்களுக்கு பிறகு லிப் ஃபில்லர்கள் கரைந்து விடவும் வாய்ப்புள்ளது.
அழகுக்காக இப்படி ஒரு சிகிச்சை முறையை செய்து கொண்ட ஊர்ஃபி ஜாவேத் தற்போது பாதிப்படைந்துள்ளார்.



