ஹாஸ்டல் திரை விமர்சனம்

காதலனை தேடி ஆண்கள் கல்லூரி ஹாஸ்டலுக்கு வரும் கதாநாயகியும், ஹாஸ்டலில் அடைக்கலம் கொடுக்கும் நாயகனும் செய்யும் லூட்டி(அந்தர் பழசு) தான் இந்த ‘ஹாஸ்டல்’ படத்தின் கதைக்களம்.

கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படிக்கும் அசோக்செல்வன், வட்டிக்கு கடன் கொடுக்கும் ரவி மரியாவிடம் கடன் வாங்கிவிட்டு தத்தலிக்கிறார். தன்னை அசோக்செல்வன் அவன் தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்குள் அழைத்து சென்றாள், அவருடைய கடனை அடைக்க பணம் உதவி செய்வதாக நாயகி ப்ரியா பவானிசங்கர் உத்தரவு அளிக்கிறார். டீலிங் பிடித்து போக, அசோக்செல்வன் ப்ரியா பாவனிசங்கரை அவனுடைய ஹாஸ்டலுக்குள் அழைத்து செல்கிறார்.

ஆண்கள் ஹாஸ்டலில் வார்டானாக பணியாற்றும் முனிஷ்காந்த், அசோக்செல்வன் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் மீது எப்போதும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி உளவு பார்த்தவாறே இருப்பவர். அப்படிப்பட்டவர் கண்ணில் ப்ரியா பவானிசங்கர் உருவம் பட, அதை ஹாஸ்டல் பாதர் நாசரிடம் போட்டு கொடுக்கிறார் முனிஷ்காந்த். நாசரிடமும், முனிஷ்காந்திடமும் ப்ரியா பவானிசங்கர் மற்றும் அசோக்செல்வன் சிக்குகிறார்களா, ரவி மரியாவிடம் வாங்கிய கடனை அசோக்செல்வன் அடைகிறாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை.

என்னடா, இந்த கதையை பல படங்களில் பார்த்திருக்கிறோமே என்று சொல்லும் உங்கள் மைண்ட் வாய்ஸ் இங்கு கேட்கிறது. உங்கள் மைண்ட் வாய்ஸ் சொல்லுவது முற்றிலும் உண்மை, கதை அந்தர் பழசு தான். என்ன கொஞ்சம் அடல்ட் காமெடி என்ற பெயரில் கேவலமான கடி ஜோக்கை சேர்த்திருக்கிறார்கள்.

அசோக்செல்வன் தன்னால் முடிந்தவரை காமெடி செய்ய நினைத்துள்ளார், ஆனால் அவருடைய காமெடியை பார்ப்பதற்கு கடியாகவும், அவருடைய நடிப்பு செயற்கையாகவே இருக்கிறது. ப்ரியா பவானிசங்கர் எப்போதும் போல் ஆடியன்ஸை ஈர்க்கும் வகையில் தன்னுடைய நடிப்பிலும், காமெடியிலும் பார்வையாளர்களை சமாதானம் செயகிறார். ப்ரியா பவானிசங்கரை, ஒரு கட்டத்தில், “எதை வேண்டுமானாலும் திறந்து காட்டுகிறேன்” என்ற ஒரு வசனத்தை சொல்ல வைத்து அவரை கேவலம் செய்துள்ளார் இயக்குநர் சுமந்த ராதாகிருஷ்ணன். ரவி மரியாவின் வசனம் பல நேரங்களில் எரிச்சலை தான் ஊட்டுகிறது. சதீஷ் கவுண்டர் ஜோக், ‘முண்டாசுபட்டி’ ராமதாஸ் மற்றும் யோகியின் நகைச்சுவை காட்சிகள் எப்போதாவது சிரிப்பு வரவழைக்கிறது. எப்போதும் போல் நாசர் அவருடைய நடிப்புக்கு நியாயம் செய்துள்ளார். அறந்தாங்கி நிஷாவின் பேய் வேஷம் காட்சிகள் தேவையில்லாத கடி என்று தான் சொல்லலாம்.

போபோ சசியின் இசையும் பிரவீன் குமாரின் ஒளிப்பதிவும் சுமார் ரகம் தான். சுமந்த ராதாகிருஷ்ணனின் அந்தர் பழசு திரைக்கதையில் உருவாகியுள்ள இந்த ‘ஹாஸ்டல்’ படத்தை, தன்னால் முடிந்த அளவுக்கு படத்தொகுப்பு செய்து பார்வையாளர்களை திருப்தி படுத்த முயற்சித்துள்ளார் எடிட்டர் ராகுல். மொத்தத்தில் ‘ஹாஸ்டல்’ படம் சுமார் ரகம் தான்.

மதிப்பீடு: 2/5

Leave a Response