சர்க்கரை தூக்கலா ஒரு புன்னகை – திரை விமர்சனம்

இயக்குநர் – இயக்குநர் மகேஷ் பத்மநாபன்
நடிகர்கள் – ருத்ரா, சுபிக்‌ஷா

கதை – காதலர்களுக்குள் இடையில் இன்னொருவர் நுழைய அதனால் காதலில் வரும் பிரச்சனை தான் கதை.

‘நேஷனல் ஜியாகிரபிக்’ சேனல் நடத்தும் போட்டிக்காக ஒரு டாகுமெண்டரி படம் எடுக்கிறார் நாயகி. சவுண்ட் எஃபெக்ட்ஸ் ரெக்கார்டிங் செய்வதில் வல்லுநராக இருக்கும் நாயகன் அவருக்கு உதவி செய்கிறார். அப்போது அவர்களுக்கு காதல் மலர இருவரும் ஒன்றாக வாழ ஆரம்பிக்கிறார்கள்.

அந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்து இந்திய இசையை பதிவு செய்ய வரும் பீட்டர் ஹார்ட்லி என்பவருக்கு நாயகி சுபிக்‌ஷா உதவ ஆரம்பிக்கிறார். அவர்கள் உறவை வேறு மாதிரி உணரும் நாயகன் பிரிந்து போகிறார். இதன் பிறகு இருவரும் சேர்ந்தார்களா என்பதே கதை.

கடந்த இரண்டு வருடங்களாக பல திரைவிழாக்களில் விருதுகளை வென்றிருக்கிறது இந்தப்டம். அந்த வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் உண்மையில் எப்படி இருக்கிறது.

தமிழில் ஒரு மியூசிக்கல் படமெடுக்கலாம் என முயற்சியில் ஒலிப்பதிவை பின்னணியாக வைத்து கொண்டு ஒரு காதல் கதையை சொல்ல முயன்றிருக்கிறார்கள் -ஆனால் ஆரவ்க்கோளாறு தான் அதிகம் வெளிப்பட்டிருக்கிறது.

மலையாள திரைப்படத்தில் நாயகனாக நடித்த ருத்ரா இந்த படத்தில் கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். நடிப்பிற்காக பல விருதுகள் வேறு வென்றிருக்கிறார். ஆனால் புதுமுகம் என்பது அங்கங்கே அப்பட்டமாக தெரிகிறது.

தமிழ் சினிமா அதிகம் பயன்படுத்திகொள்ளாத நடிகை சுபிக்‌ஷா, இதில் தன் நடிப்பால் கவர்கிறார். ஆனால் அவரது நடிப்பிற்கேற்ற காட்சிகள் திரையில் சரியாக வரவில்லை.

ஒரு வரியில் முடியக்கூடிய கதை, திரைக்கதையும் சுவாரஸ்யம் இல்லை. அனுபவமில்லா நடிகர்கள், வலுவே இல்லாத பாத்திரங்கள், குடிக்க சொல்லி அறிவுரை. மேக்கிங்கிலும் நிறைய சிக்கல்கள் என தடுமாறியிருக்கிறார் இயக்குநர் மகேஷ்.

படத்தின் ஒரே பலம் ராஜேஷ், அவரது இசையில் பாடல்கள் எல்லோரையும் ஈர்த்துள்ளது. ஒலி சம்மந்தப்பட்ட படம் என்பதால், தன் திறமை முழுதையும் காட்டியிருக்கிறார். பிஜு விஸ்வநாத் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையானதை செய்திருக்கிறது.

நன்றாக வந்திருக்க வேண்டிய படம் சொதப்பலான மேக்கிங்கால் வெறும் முயற்சியாக மிஞ்சிவிட்டது.

Leave a Response