மகாராஷ்டிரத்தை விட தமிழகத்தில் அதிக பரிசோதனை நடக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்..

தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரத்தைவிட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இகுதுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 2,000 செவிலியர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் செவிலியர்கள் பற்றாக்குறை என்ற நிலையே இருக்காது. அரசு இயந்திரம் இரவு, பகல் பாராமல், ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளிலேயே தொற்று ஏற்பட்டாலும், தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கரோனா பாதிப்பு என்பது பெரிய செய்தி அல்ல, அதையும் தாண்டி களத்தில் பணியாற்றுவதுதான் செய்தி. தமிழகத்தில் சோதனை அதிகரிப்பதால் அதிக கரோனா பாதிப்பை கண்டறிய முடிகிறது. தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரத்தைவிட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது. சென்னையில் கரோனா சிகிச்சைக்காக படுக்கை வசதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்டான்லி மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் வரதராஜன் தனது செயலுக்கு தொலைபேசி மூலம் வருத்தம் தெரிவித்தார். முன்னதாக புதிதாக பணியில் சேர்ந்த செவிலியர்களை வாழ்த்தி, பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர். உடன் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தார்.

Leave a Response