இந்தியா-சீனா பிரச்சனை விவகாரத்தில் இருநாடுகளும் மகிழ்ச்சியாக இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 59 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகப்படியாக இருந்து வரும் நிலையில் லடாக் பகுதியில் சீனா அத்துமீறி ராணுவ வீரர்களை அனுப்பி வருகின்றது. எல்லையில் அமைதியைக் குலைக்கும் விதமாக அதன் நடவடிக்கைகள் தொடர்ந்து இருந்து வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் ட்ரம்ப், “இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே பெரிய மோதல் நடந்து வருகின்றது. இருநாடுகளுக்கு இடையே சமரசம் செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இதுதொடர்பாக இந்தியப் பிரதமருடன் நான் பேசினேன். அவர் நல்ல மனநிலையில் இல்லை. மேலும், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் அதிக மக்கள் தொகையையும், சக்திவாய்ந்த போராளிகளையும் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள டிரம்ப், எல்லை பிரச்சனை விவகாரத்தில் இருநாடுகளும் மகிழ்ச்சியாக இல்லை என்றும். இந்தியப் பிரதமரை நான் விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர்” என்றார்.

Leave a Response