சர்ச்சையை கிளப்பும் “Godman” வெப் சீரிஸ் : டீசருக்கு எதிராக புகார்..

இணையதளங்களில் பிரபலமான ZEE 5 ஆன்லைன் சேனலில் சமீபத்தில் Godman என்ற வெப் சீரிஸ் டீசர் வெளியாகி குறிப்பிட்ட சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Godman டிரெய்லரில் குறிப்பிட்ட சமூகத்தை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் வகையில் வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக நாகை எஸ்.பி அலுவலகத்தில் அந்தணர் முன்னேற்ற கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில், Godman டீசரில் தங்கள் சமூகத்தை குறித்தும், வேதத்தை குறித்தும் தவறாக சித்தரித்து இருப்பதாகவும், கொச்சையான வசனங்கள் சமூகம் குறித்து இடம்பெற்று இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

எனவே Godman வெப் சீரிஸ் ட்ரைலரை தடை செய்வதுடன் வேண்டுமென்ற ஒருப்பிரிவினரின் மதத்தை இழிவுபடுத்திய அத்திரைப்படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ மற்றும் ZEE 5 ஆன்லைன் நிறுவனத்தின் நிர்வாகிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Response