இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துமா! டிரம்பின் புதிய ஆசிய வெளியுறவு கொள்கை..!

trampa

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடக்கும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் தம்மை சந்தித்த இந்திய வெளியுறவு இணையமைச்சர் வி.கே.சிங்கிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் இதை தெரிவித்துள்ளார். டிரம்பின் புதிய ஆசிய வெளியுறவு கொள்கையில் பாகிஸ்தானுக்கு முக்கிய இடம் வழங்கப்படமாட்டாது என்ற அவர் இந்தியா உடனான நெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் புதிய கொள்கை இருக்கும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக மணிலாவில் 18 ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்தனர். கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் முக்கிய விவாத பொருளாக மாறியது. ஐ.நா.விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளை அனுசரிக்குமாறும் உலக நாடுகளின் அறிவுறுத்தலை ஏற்று அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நிறுத்தி வைக்குமாறும் வடகொரியாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. தென் சீனா கடலில் புதிதாக தீவுகளை உருவாக்கி படை பெருக்கம் நடத்துவதை கைவிடுமாறு சீனாவுக்கு இந்த கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Response