என்னை கைது செய்தால் பதற்றம் தான் அதிகரிக்கும் – கமல்ஹாசன்..!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது,

கோட்சே பற்றி தாம் பேசிய கருத்தை பல காலமாக கூறி வருவதாகவும், மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது மெரினாவில் கூட இதே கருத்தை பேசியதாகவும் குறிப்பிட்டார். மேலும், தனது பேச்சால் இந்துக்கள் மனது புண்படவில்லை என கூறிய கமல், இந்துக்கள் யார், ஆர்.எஸ்.எஸ். யார் என்பதை பிரித்துப் பார்க்க வேண்டுமென குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளே இதன் மூலம் ஆதாயம் தேடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அரசியல்வாதிகள் உள்பட யாரும் தமது கருத்து குறித்து இனி பேசக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார். ஆனால், சில தலைவர்கள் அதனை மீறி பேசிவருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கைதுக்கு தாம் பயப்படவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தன்னை கைது செய்தால் பதற்றம் தான் அதிகரிக்கும் எனக் கூறிய கமல், அதனைச் செய்ய வேண்டாம் என வேண்டுகோளாக இல்லாமல், அறிவுரையாக கூறுவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Response