“யு/ஏ” சான்றிதழ் பெற்ற விஜய் ஆண்டனியின் “கொலைகாரன்”..!

ஆண்ட்ரூ ஏகாம்பரம் இயக்கத்தில் விஜய் ஆண்டனி தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘கொலைகாரன்’. இந்தப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரம்ஜான் விடுமுறை தின சிறப்பு திரைப்படமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது.

படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் வெகுவாக பாராட்டி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினர். இதனையடுத்து இந்த படம் சென்சார் உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த படத்தில் முதல் முறையாக விஜய் ஆண்டனியும் ஆக்சன் கிங் அர்ஜூனும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆஷிமா, சீதா, நாசர், சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார்.

Leave a Response