கருத்துக்கணிப்பை விட மக்கள் கணிப்பையே நம்புகிறோம் : தம்பிதுரை அதிரடி பேச்சு..!

சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றின் கருத்துக்கணிப்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 36 இடங்களை கைப்பற்றும் என்று கூறியது.

அதிமுகவுக்கு 4 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து கருத்து கூறிய அதிமுக எம்பி தம்பிதுரை, ‘கருத்து கணிப்பை அதிமுக நம்புவதில்லை என்றும், மக்களின் கணிப்பைதான் நம்புகிறது என்றும் கூறினார்.

மேலும் பாஜக யாருடன் கூட்டணி சேர விரும்புகிறது என்பதை பொன்.ராதாகிருஷ்ணன் தான் கூற வேண்டும் என்றும் என்னை பொருத்தவரையில் அதிமுக-பாஜக கூட்டணி இருக்காது என்றும் கூறினார்

Leave a Response