இப்படியும் கலாய்க்கலாம் : கடைக்காரிடம் கலாய் வாங்கும் ரஜினிகாந்த்..!

ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது என கடைக்காரரிடம் கூட கலாய் வாங்கியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா செல்வதற்காக சென்னை ஏர்போர்ட் வந்திருந்த போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது கமல்ஹாசன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து களத்தில் இறங்கி உதவி செய்து வருகிறார். ஏன் நீங்கள் மக்கள் பார்க்க செல்லவில்லை என கேள்வி எழுப்பினார் பத்திரிகையாளர் ஒருவர்.

அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான் இன்னும் கட்சி ஆரம்பிக்கலேயே ஆரம்பித்தது அப்புறம் அதுலாம் பார்த்துக்கலாம் என பதிலளித்தார்.

ரஜினிகாந்தின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அரசியல் கட்சியை ஆரம்பித்து தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும் தான் மக்களை சந்திப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது கடைக்காரர் ஒருவர் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை இங்கு கடன் கிடையாது என கூறி ஒரு பலகையை வைத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை நெட்டிசன் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கடைக்காரன் கூட ரஜினியை கலாய்க்கிறார் என்பது போல பதிவிட்டுள்ளார்.

Leave a Response