ஜனவரி 3-ம் தேதியில் இருந்து மக்களை நோக்கி பயணம் – ஸ்டாலின்..!

வரும் ஜனவரி 3-ம் தேதியில் இருந்து மக்களை நோக்கி பயணம் செல்ல இருக்கிறோம் என் ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், “இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.கஜா புயல் மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி வாரியாக பூத் கமிட்டி அமைக்கப்பட்டு, 12 பேர் அடங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் குழு, அந்த பூத் கமிட்டிகளில் ஆய்வு மேற்கொண்டு அந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள்.40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களும் தொகுதியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு தலைமைக்கு அறிக்கை அளித்திருக்கிறார்கள்.இந்த விவகாரங்கள், அறிக்கைககள் மீது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும், 12,617 ஊராட்சிகளில், ஊராட்சி சபை கூட்டத்தை கூட்டி அதை தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில், வரும் ஜனவரி 3-ம் தேதியில் இருந்து மக்களுடனான பயணத்தை தொடங்கவுள்ளோம். “மக்களிடம் செல்வோம்..மக்களிடம் சொல்வோம்..மக்களின் மனங்களை வெல்வோம்..” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி வரும் ஜனவரி 3-ம் தேதியில் இருந்து பயணம் தொடங்கி 12,617 ஊராட்சிகளுக்கும் செல்லவிருக்கிறோம்.அங்கு கூட்டம் நடத்தி அதை நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக பயன்படுத்திக்கொள்ளும்.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயன்று வருகிறது. அப்படி அமையும் கூட்டணி கொள்கைக்கூட்டணியா ? அல்லது கொள்ளைக்கூட்டணியா? என்ற கேள்வி எழுகிறது.ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் – ஐ கைகுலுக்கி சேர்த்து வைத்தவர் தான் பிரதமர் மோடி.காங்கிரஸ் – திமுக கூட்டணியில் கமல் இணைவரா என்பது குறித்த யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது.

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் போட்டியிடும்.ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்பது திமுகவின் உணர்வு.அதையே நானும் வெளிப்படுத்தினேன். இதை யாரும் எதிர்க்கவில்லை.சற்று பொறுத்திருந்து வெளிப்படுத்தியிருக்கலாம் என்றுதான் பரவலாக பேசப்படுகிறது.

விரைவில், மற்ற கட்சிகளும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.மூன்றாவது அணி என்று ஒன்று உருவானால்பார்த்துக்கொள்ளலாம்.எமர்ஜென்ஸியை விட மோசமான சர்வாதிகார ஆட்சியை மோடி நடத்திக்கொண்டிருக்கிறார்” என்று பேசினார்.

 

Leave a Response