அமேசான் பிரைம் தமிழ் சீரிஸ் : பாபி சிம்ஹா, பார்வதி நாயர் நடிக்கும் “வெள்ள ராஜா”..!

நெட்ப்ளிக்ஸ், ஜி5, அமேசான் பிரைம் வீடியோ போன்றவை பிரத்யேகமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. மரபு ரீதியிலான தொலைக்காட்சி அனுபவத்திலிருந்து, நவீன காலத்திற்கான அனுபவத்திற்கு பார்வையாளரை இவை நகர்த்தி வருகின்றன. இதில் பல சீரிஸ்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

முதல் முறையாக அமேசான் பிரைம் வீடியோ, தமிழில் வெள்ள ராஜா என்ற பெயரில் சீரிஸ் ஆரம்பிக்கிறது. டிசம்பர் 7ம் தேதி ஆரம்பிக்கப்படும் இந்த சீரிஸை, 200 நாடுகளில் பார்க்க முடியும். தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும், டப்பிங் மூலம், பார்க்க முடியும்.

வட சென்னையின் அடையாளமான பாவா லாட்ஜில் பயண கைதிகள் போல சிக்கிக்கொள்ளும் கதாப்பாத்திரங்களை சுற்றி கதை நகருகிறது.

வெள்ள ராஜா சீரிஸ் குகன் சென்னியப்பன் என்பவரால் இயக்கப்படுகிறது. பாபி சிம்ஹா, பார்வதி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Leave a Response