செயற்கை மழை, காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் – ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி..!

மேகதாது அணை விவகாரம் குறித்து திருச்சியில் நடைபெற்ற திமுக தோழமை கட்சிகளுடனான ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் தண்ணீர் இல்லை, புல் கூட முளைக்காத சூழலில், தாமரை மலர்ந்துவிடுமா?  என பாஜக-வை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில் இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும். தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலர செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் என்று தமிழிசை பதில் அளித்துள்ளார்.

Leave a Response