பாபிசிம்ஹாவை டீலில் விட்ட சி.வி.குமாரும் சித்தார்த்தும்..!

கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற, வித்தியாசமான கதைக்களத்தில் சொல்லப்பட்டிருந்த படமான ‘லூசியா’வைத்தான் சி.வி.குமாரும் அபினேஷும் இணைந்து தமிழில் ‘எனக்குள் ஒருவன்’ எகிற பெயரில் தமிழ்ல் ரீமேக் செய்து தயாரித்துள்ளார்கள்.

சைக்காலஜிக்கல் த்ரில்லரான ‘லூசியா’வை கன்னடத்தில் பவன்குமார் என்பவர் இயக்கியிருந்தார். கடந்த வருடம் ஜூலை மாதம் லண்டனில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது மிகச்சிறந்த படம் என பார்வையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது ‘லூசியா’..

இப்போது தமிழில் ரீமேக்கிற்கு இசையமைத்துள்ள சந்தோஷ் நாராயணன் தான் கன்னடத்தில் ‘லூசியாவுக்கும் இசையமைத்திருந்தார். அப்போதே படம் நன்றாக இருக்கிறது என்று சி.வி.குமாரிடம் சொல்ல, படத்தைக்கோட்ட பார்க்காமலேயே பெங்களூர் சென்று ரீமேக் ரைட்ஸை வாங்கிவந்துவிட்டார் சி.வி.குமார்.

அப்போது சி.வி.குமாருடன் காரில் கூடவே சென்றவர் ‘ஜிகர்தண்டா’ புகழ் பாபி சிம்ஹா தான். இந்தப்படத்தின் ரீமேக்கில் ஏற்கனவே நடிக்க விரும்பிய சித்தார்த், சி.வி.குமார் ரீமேக் ரைட்ஸை வாங்கி வருவதை அறிந்து உடனே போன் செய்து ரைட்ஸ் வாங்கியாச்சா.. நான் தானே ஹீரோ என கேட்டாராம்.

அதற்கு சி.வி.குமாரும் ஆமாம் நீங்கள் தான் ஹீரோ என்று சொல்ல பக்கத்தில் அமர்ந்து இவர்கள் பேசுவதை கவனித்து வந்த சிம்ஹா “அடப்பாவிகளா.. நான் நடிக்கலாம்னு இருந்தேன்.. அப்ப நான் ஹீரோ இல்லையா” என ஜாலியாக ஷாக் ஆனாராம்.