“பேட்ட” ரசிகர்களின் ஆதரவை பெற்று அவர்கள் இதயங்களை வெல்லும் – கார்த்திக் சுப்புராஜ்..!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படமானது வரும் 10 ம் தேதியன்று திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் திரையுலக பிரபலங்களான சிம்ரன், திரிஷா, பாபிசிம்ஹா, சசிகுமார், விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை சன் குழுமம் தயாரித்துள்ளது.

‘பேட்ட’ படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில்,

‘பேட்ட’ எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பட குழுவுக்குமே ஒரு கனவுப் படம். ஏனென்றால் நாங்கள் அனைவருமே சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள். தலைவரின் ரசிகர்கள், மற்றவர்கள் என அனைவருக்கும் இந்தப் படம் ஒரு விருந்தாக அமையும். குடும்பப் பின்னணியில் வலுவான கதை இருக்கும் படம் பேட்ட.

தலைவர் பாணியில் நிறைய ஆக்‌ஷன், படத்தில் இருக்கிறது. இது பண்டிக்கைக்கான படம். இந்தப் படத்தையும் பண்டிகை போல கொண்டாட வேண்டும் என நினைக்கிறேன்.

அதே நாளில் இன்னும் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாவது கடுமையான போட்டி என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். ரசிகர்கள் நல்ல படங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்பதை நம்புகிறான் நான். அதனால், பேட்ட அதற்கான ரசிகர்களின் ஆதரவை பெற்று அவர்கள் இதயங்களை வெல்லும் என நான் நம்புகிறேன்’ இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Response