இருமுகன் பட கதாநாயகனுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா…

baabi
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் 2003ல் வெளியானது. ‘சாமி’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் விக்ரம் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் விக்ரமின் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றுகூட சொல்லலாம்.

‘சாமி-2’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவிருக்கிறது. இப்படத்தில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து விலகி, ஹீரோவாக பல படங்களில் நடித்து வரும் பாபி சிம்ஹா தற்போது இந்த படத்தின் மூலம் மீண்டும் வில்லனாக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பாபி சிம்ஹாவுக்கு வில்லன் கதாபாத்திரம்தான் அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response