ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆ.தி.மு.க இரு அணியாக பிரிந்துவிட்டன. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியகவும்,சசிகலா தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அரிவிக்கப்பட்ட நிலையில்,சசிகலா அணி ஓ.பன்னீர்செல்வம் அணி என இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்தை கேட்டனர்.இதனால் தலைமை தேர்தல் கமிஷன் முடக்கியது.
இரட்டை இலை சின்னத்தை பெற சசிகலா அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தலைமை தேர்தல் ஆணையத்தின் முன் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
சசிகலா அணி சார்பில் 3 லட்சத்து 1௦ ஆயிரம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யப்பட்டன. இன்று 4 வது முறையாக சசிகலா அணி சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று 1 லட்சத்து 52 ஆயிரம் பிரமாண பத்திரங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தார். இந்த 4 லாரிகலில் ஏற்றி டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன.