18 எம்.எல்.ஏக்களுக்குள் கருத்து மோதல் குறித்து தினகரன் விளக்கம்..!

18 எம்.எல்.ஏக்களுக்குள் கருத்து மோதல் என கிளம்பிய வதந்திக்கு தினகரன் விளக்கமளித்துள்ளார்.

தமிழக அரசியலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு வெளியானது. சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை தவறில்லை என கூறி 18 எம்.எல்.ஏக்களின் மனு தள்ளுபடி செய்து நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏக்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து 30ஆம் தேதி மேல்முறையீடு செய்ய உள்ளதாக தங்கத்தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.

இதனிடையே ஆலோசனைக்கூட்டத்தில் 18 எம்.எல்.ஏக்களும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், எம்.எல்.ஏ க்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை பிரிக்க நினைப்பவர்களின் ஆசை ஒருபோதும் பலிக்காது. எங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு விரைவில் பாடம் புகட்டுவோம் என தெரிவித்தார்.

Leave a Response