கருணாநிதி இல்லாத திருவாரூர் தொகுதியில் திமுக வெற்றி பெற முடியாது-அதிமுக எம்பி மைத்ரேயன்..!

தமிழகத்தில் இரண்டு இடைத்தேர்தல் கூடிய விரைவில் நடைபெறவுள்ளது. அதிமுக திருப்பரங்குன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே.போஸ், திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததாலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி குறித்து அதிமுக எம்பி மைத்ரேயன் விமர்சனம் செய்துள்ளார்.

அப்போது அவர் கூறியது:

திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம் ஏற்கெனவே அதிமுக வெற்றிபெற்ற தொகுதி என்பதால், அதில் நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவதில் சந்தேகம் இல்லை. ஆனால், கருணாநிதி இல்லாத திருவாரூர் தொகுதியில் திமுக வெற்றி பெற முடியாது. திருப்பரங்குன்றத்தின் வெற்றி திருவாரூரிலும் எதிரொலிக்கும் என தெரிவித்துள்ளார்.

Leave a Response