36 வயதினிலே ,மகளீர் மட்டும் , நாச்சியார் படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்த ஜோதிகா அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்ச்சியில் ‘துமாரி சுலு’ என்ற சூப்பர் ஹிட் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான “காற்றின் மொழி “படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது .மொழி படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்ட அதே இயக்குனர் ராதா மோகன் மற்றும் ஜோதிகா கூட்டணி காற்றின் மொழி-யில் மீண்டும் இணைந்து களமிறங்கியுள்ளனர் .அதுவே இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . விதார்த் ஜோதிகாவின் கணவனாக நடிக்கிறார் .
மொழியில் ஊமையாக கண்களாலும் செய்கையாலும் நடித்து அசத்திய ஜோதிகா “காற்றின் மொழி”யில் அதற்கு நேர் மாறான வாயாடி ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்தில் நடிக்கிறார், தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து புதிதாக சில கதாபாத்திரங்களையும் சேர்த்து புதுமையான பல விஷயங்களோடு இப்படத்தை இயக்கியுள்ளார்,ராதா மோகன் .பெண்ணை மையப்படுத்திய படம் என்றாலும் ,அனைத்து தரப்பினரையும் கவரும் விதமான ஜாலியாக குடும்பத்துடன் மனம் விட்டு சிரித்து மகிழக்கூடிய படமாக இருக்கும் காற்றின் மொழி என்றார் ராதா மோகன் .
விதார்த் கூறுகையில் ” ஜோதிகாவின் கணவராக நான் இதில் நடிக்கிறேன் .கணவன் மனைவிக்குள் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை .இது மாதிரியான கதாபாத்திரத்தில் இதுவரை நான் நடித்ததில்லை. அழகான ,அன்பான கணவராக நடித்துள்ளேன். விதார்த் நல்ல நடிகன் என்று இந்த குடும்பப்பாங்கான கதை எனக்கு மீண்டும் ஒரு அடயாளத்தை கண்டிப்பாக கொடுக்கும். “
லட்சுமி மஞ்சு மற்றுமொரு முக்கிய கதாபாத்திரமாக நடிக்க, சிம்பு “காற்றின் மொழி”யில் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார் . குமாரவேல் , பாஸ்கர் ,மனோபாலா ,மோகன் ராமன் ,உமா பத்மநாபன் மற்றும் பலர் நடித்துள்ளனர் .மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவை செய்து A.H. காஷிஃப் இசையமைதுள்ளார் . பாப்ட்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (BOFTA MEDIA WORKS INDIA PVT. LTD.,) க்காக G.தனஞ்ஜயன் , S.விக்ரம் குமார், மற்றும் லலிதா தனஞ்ஜயன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.