கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் . மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெளியாக வேண்டிய பல படங்கள் இன்னும் கிடப்பிலே இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் ஜோதிகா நடிப்பில் உருவான ‘பொன்மகள் வந்தாள்’ஆன்லைன் தளத்தில் (OTT) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும், ஒரு தரப்பினர் இந்த புது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்பு, ஆதரவு என நகர்ந்த ‘பொன்மகள் வந்தாள்’ இன்று அமேசான் ப்ரைமில் வெளியானது. உண்மையை வெளிக்கொண்டு வர போராடும் வழக்கறிஞராக ஜோதிகா இப்படத்தில் நடித்துள்ளார்.
ஆன்லைன் தளத்தில் ஏற்கெனவே நேரடியாக தமிழ் படங்கள் சில வெளியாகி இருந்தாலும், முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த திரைப்படம், ஜோதிகா போன்ற முன்னணி நடிகை நடித்துள்ள திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாவது இதுவே முதல்முறை.