வரும் லோக்சபா தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் மோடி தலைமையில், பா.ஜ.க, ஆட்சி அமையும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
பயங்கரவாதிகள், தங்களை மூளைச்சலவை செய்துவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். பயங்கரவாதிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். பயங்கரவாத அமைப்புகள் மோசமானவர்கள். வளர்ச்சிக்கு எதிரானவர்கள். தேவைப்பட்டால், அவர்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். எதிர்ப்பாளர்களின் நோக்கம் பா.ஜ.க, ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து விஷயங்களில் மாநில அரசைவிட்டுவிட்டு மத்திய அரசை பற்றி பேசுகின்றனர். 8 வழிச்சாலை திட்டம் முழுக்க முழுக்க, சென்னையிலிருந்து, மேற்கு மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சியை கொடுக்கும் திட்டம். கோவையை தாண்டி இருக்கும் மாவட்ட மக்களுக்கு பயன்கொடுக்கும் திட்டம். தமிழகத்தின் மொத்த தொழில் வளத்தில், மேற்கு மாவட்டத்தில் 60 சதவீதம் உள்ளது. அது பாதிக்கப்பட வேண்டும்.
தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்க வேண்டும் என்பதே எதிர்ப்பாளர்களின் நோக்கம். மதுரவாயல் திட்டம் தொடர்பாக திமுக போராட்டம் நடத்தியுள்ளதா? இந்த திட்டம் தாமதமாவது சட்டசபையில் அக்கட்சி பேசியுள்ளதா? சந்தேகம் வேண்டாம் வரும் லோக்சபா தேர்தலில், எத்தனை கட்சிகள், எத்தனை திட்டங்கள்போட்டு, எத்தனை கூட்டணி வைத்தாலும், இப்போது இருக்கும் பலத்தைவிட கூடுதல் பலம் பெற்று, மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க, ஆட்சி அமையும்.
இதில் சந்தேகம் வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.