அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும்:சென்னை வானிலை மையம்..!

சென்னை உட்பட வடமாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கொளுத்தும் வெயில் மற்றும் கூடவே வீசும் அனல் காற்றால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

வெளுக்கும் வெயிலால் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். இந்நிலையில்

அடுத்த 2 நாட்களுக்கு, சென்னை உள்பட வடதமிழகத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவிழந்ததாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Response