தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்:உயிரிழப்புகளுக்கு அரசே பொறுப்பு-ரஜினிகாந்த் கடும் கண்டனம்..!

தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது மாணவி உட்பட 9 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

கொத்தாக 9 உயிர்களை பறித்துள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் என்ற டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.

நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ரஜினி தனது கண்டனத்தில் ஒரு இடத்தில் கூட போலீசாரின் நடவடிக்கையை கண்டிக்கவில்லை. சென்னை ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறையினர் தாக்கப்பட்டது குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்திருந்தார் ரஜினி.

இந்நிலையில் 9 அப்பாவி உயிர்களை போலீசார் பறித்துள்ள நிலையில் அதுகுறித்து ஒரு இடத்தில் கூட ரஜினி கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக அரசுதான் இதற்கு முழு பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

 

Leave a Response