அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறாரா “பிக்பாஸ் ஜூலி” – சமூக வலைதளங்களில் உலவும் வீடியோ..!

சென்ற வருடம் ஒட்டுமொத்த இந்தியாவையே தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு ஜல்லிக்கட்டு போராட்டம். அதில் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி பிரபலமானவர் மரிய ஜூலியானா.

பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி, சின்னத்திரை, வெள்ளி திரை என ஆள் வேற லெவலுக்கு சென்று விட்டார். பெரும்பாலும் தன்னை சமூக அக்கறை உள்ள ஒருவராகவே காட்டி கொள்ளும் இவர், சமீபத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

அந்த வீடியோவில் ‘எக்கச்சக்க அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நம் விவசாயிகளுக்கான வாழ்வாதாரம், நீட் தேர்வு காவிரி விவகாரம் என எக்கச்சக்க பிரச்சனைகள். இந்த நிலைமையில் இந்த மண்ணின் மேல் எனக்கும் ஒரு பெரிய பொறுப்பிருக்கிறது. என்னோட மக்களுக்காக நான் என்ன பண்ண போகிறேன்…. தொடர போகிறேன்’ என இறுதியில் சத்தமில்லாமல் ஏதோ முனு முனுக்கிறார்.

அதனை வைத்து பார்க்கும் போது இறுதியில் அவர் கூறியது, ‘உங்க ஆட்சி என்ன கொடுத்துச்சி..?’ என்பது தெரிகிறது. இப்படி அரசியல் பற்றி பேசி இருப்பதால், ஜூலியும் ஒருவேளை கட்சி ஆரம்பிக்கப் போகிறாரோ..? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

Leave a Response